இரவில் இந்த கிரீமை 2 சொட்டு முகத்தில் தடவி பாருங்க காலையில் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்


S MuthuKrishnan
12-04-2025, 08:43 IST
www.herzindagi.com

    வியர்வையால் எண்ணெய் பசை, அழுக்கு சேர்ந்து முகம் கருமையடைந்து விட்டதா? எப்போதுமே முகம் மந்தமாக தோற்றம்ளிக்கிறதா?

    இந்த பதிவில் உள்ளது போல் உங்களுக்கான சொந்த நைட் க்ரிமை தயாரித்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவுங்கள் மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவும் போது உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்கும். 15 நாட்களில் உங்கள் முகம் ஹீரோயின் போல மாறும்.

பாதாம் நைட் கிரீம் தேவையான பொருட்கள்

    பாதாம் பருப்பு 10- 15 இரவு முழுவதும் ஊற வைத்தது, (பாதாம் பருப்பு மேலே உள்ள தோலை நீக்கிவிடவும்), பால் இரண்டு டீஸ்பூன்.

செய்முறை

    ஒரு மிக்ஸி பிளண்டரில் ஊற வைத்த பாதாம் பருப்பை சேர்த்து அதோடு இரண்டு டீஸ்பூன் பச்சை பாலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.இதனுடன் அலோவேரா ஜெல்லை ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். இதை அப்படியே குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

    இரவு தூங்கும் முன்பு நீங்கள் தயாரித்த இந்த நைட் கிரீமை தடவி விட்டு தூங்கவும்.மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.

    பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ - யில் உள்ள தன்மை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை செய்யும். இதனால் முகத்தில் நல்ல பளபளப்புடன் கூடிய நெகழ்வுத் தன்மை கிடைக்கும். இதனால் உங்கள் முகம் இயற்கையாகவே பளிச்சென்று இருக்கும்.

    மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். முகத்தில் உள்ள தோல்களை, சருமத்தை உடனடியாக பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் தன்மை பாதாம் பருப்பில் உள்ளது.

    இந்த பதிவில் உள்ளது போல இயற்கையான நைட் க்ரீமை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து ஒரு 15 நாள் தொடர்ச்சியாக இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவி தூங்கச் செல்லுங்கள் மறுநாள் காலை உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.