சருமத்தில் இறந்த செல்களை நீக்குவது எப்படி தெரியுமா ?


Raja Balaji
03-06-2025, 08:46 IST
www.herzindagi.com

தேன் - ஓட்ஸ் கலவை

    இரண்டு டீஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

    இதை உங்களுடைய முகத்தில் 5 நிமிடங்களுக்கு மென்மையாக தேய்க்கவும்.

    10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதை முயற்சிக்கவும்.

    ஓட்ஸ் சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் தன்மையை நீக்க உதவுகிறது.

    தேன் முகத்தில் ஈரப்பதத்தை உறுதி செய்கிறது. இவை இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தும் போது சருமம் பொலிவு பெறுகிறது.

    நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்ட தேன் சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் இதர சரும பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.