பத்தே நிமிடத்தில் வீட்டிலேயே ரோஸ் வாட்டர் செய்யலாம்.. எப்படினு பாருங்க!


Alagar Raj AP
24-05-2024, 14:56 IST
www.herzindagi.com

ஸ்டெப் 1

    ரோஜா பூக்களின் இதழ்களை பிரித்து தூசி இல்லாமல் சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    ஒரு கடாயில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்த ரோஜா இதழ்களை போட்டு மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

ஸ்டெப் 3

    தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் ரோஜா இதழ்களின் நிறம் மாற தொடங்கும், அப்படி ரோஜா இதழ்களின் நிறம் முற்றிலும் மாறியதும் கடாயை அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள்.

ஸ்டெப் 4

    இறுதியாக தண்ணிரை குளிர வைத்து ரோஜா இதழ்களை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்தால் ரோஸ் வாட்டர் தயார்.

சேமிக்கும் முறை

    இதை குளிர்சாதன பெட்டி அல்லது குளிர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம்.

கால அளவு

    இதை நீங்கள் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைத்தால் தாராளமாக 6 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

    அடுத்த முறை கடைகளில் ரோஸ் வாட்டர் வாங்குவதாக இருந்தால் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரித்து பயன்படுத்துங்கள்.