கோடையில் பெண்களிடம் இந்த 5 பொருட்கள் அவசியம் இருக்க வேண்டும்!


Alagar Raj AP
03-04-2024, 15:25 IST
www.herzindagi.com

    கோடை காலம் ஆரம்பித்தாலே சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தகைய சிறப்பு கவனத்திற்கு தேவையான சில அழகு சாதனப் பொருட்களைப் பற்றி இந்த இணைய கதையில் காண்போம்.

சன்ஸ்கிரீன்

    கோடையின் வெப்பத்தில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது மிகவும் அவசியம். சன்ஸ்கிரீனைத் வாங்கும் போது நம் சருமத்திற்கு ஏற்றதாக இறுக்கமா என்று பார்த்து வாங்குங்கள்.

லிப் பாம்

    குளிர்காலத்தை போல் கோடை காலத்திலும் உதடுகளுக்கு பராமரிப்பு அவசியம். எனவே உதடுகளை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்துங்கள்.

மாய்ஸ்சரைசர்

    அதிக வெப்பம் காரணமாக சருமத்தில் நீர் வற்றி சருமம் கரடுமுரடாக இருக்கும். இதை தடுத்து சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசர் உதவுகிறது.

ஆயில் ஃப்ரீ ப்ரைமர்

    சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க மேக் அப் போடுவதற்கு முன் ப்ரைமர் பயன்படுத்துவது எல்லோரும் அறிந்ததே. ஆனால் கோடை காலத்தில் ப்ரைமர் பயன்படுத்தும் போது எண்ணெய் இல்லாத ப்ரைமரை பயன்படுத்த வேண்டும்.

உலர் ஷாம்பு

    கோடையில் அதிகம் வியர்ப்பதால் உச்சந்தலையில் எண்ணெய் பிசுக்கு போல் உருவாகி முடி சிக்கி கொள்ளும். இதை தடுக்க உலர் ஷாம்பு பயன்படுத்த வேண்டும். இது கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, முடி ஒட்டாமல் தடுக்கிறது.

    பயனுள்ளவர்களுக்கு இந்த இணைய கதையை பகிருங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளுக்கு ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.