சன்ஸ்கிரீன் தொடர்பான இந்த 8 கட்டுக்கதைகளை நம்பாதீங்க
Alagar Raj AP
10-04-2025, 15:46 IST
www.herzindagi.com
சன்ஸ்கிரீன்
சருமப் பராமரிப்பில் சன்ஸ்கிரீன் ஒரு முக்கிய பகுதியாகும். இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆனால் சன்ஸ்கிரீன் தொடர்பான பல தவறான கருத்துக்கள் உள்ளன. அந்த தவறான கருத்துக்கள் பற்றிய உண்மையை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
கட்டுக்கதை 1
கோடைகாலத்தில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது தவறான கருத்து. எந்த காலமாக இருந்தாலும் சூரியனின் புற ஊதா கதிர்கள் நமது சருமத்தை பாதிக்கும்.
கட்டுக்கதை 2
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், இதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை. ஆனால் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
கட்டுக்கதை 3
கருப்பு தோல் உள்ளவர்களுக்கு அதிக மெலனின் இருப்பதால் சன்ஸ்கிரீன் தேவையில்லை என்று கூற்று உள்ளது. ஆனால் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்க மெலனின் மட்டும் போதாது. சருமத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க சன்ஸ்கிரீன் பயன்பாடு தேவை.
கட்டுக்கதை 4
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும் என்ற தவறான கருத்து உள்ளது. நாம் வெளியே செல்லும் போது ஏற்படும் வியர்வை, தூசி காரணமாக படிப்படியாக சன்ஸ்கிரீன் அதன் பாதுகாப்பு அளிக்கும் தன்மையை இழந்துவிடும். அதனால் ஒவ்வொரு 2 முதல் 3 மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
கட்டுக்கதை 5
வீட்டுக்குள் இருக்கும் போது சன்ஸ்கிரீன் தேவையில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் இது தவறு. புற ஊதா கதிர்கள் மேகங்கள் மற்றும் ஜன்னல்கள் வழியாகவும் சென்று சருமத்திற்கு சேதம் விளைவிக்கும். எனவே, வீட்டுக்குள் கூட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
கட்டுக்கதை 6
சூரியன் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி-யை உடல் உறிஞ்சுவதை சான்ஸகிரீன் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் விளைவு மிக குறைவானது மட்டுமே. இருப்பினும், உடலுக்கு வைட்டமின் டி கிடைக்க நாள் முழுவதும் வெயிலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதுவும் காலை மட்டும் சூரிய ஒளியில் இருந்தால் போதும்.
கட்டுக்கதை 7
சில சான்ஸகிரீன்கள் நீர்புகா தன்மையுடையது, அதானல் வியர்த்தாலும் சான்ஸகிரீன் அழியாது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் எந்த சான்ஸகிரீனும் 100 சதவீதம் நீர்ப்புகா தன்மையுடையது அல்ல.
கட்டுக்கதை 8
எல்லா சன்ஸ்கிரீன்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்ற தவறான புரிதல் உள்ளது. ஆனால் UVB கதிர்களுக்கு மற்றும் UVA கதிர்களுக்கு என்று வெவ்வேறு சன்ஸ்கிரீன்கள் உள்ளன. அதேபோல் அதிக SPF அதிக பாதுகாப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு குறிப்பிடத்தக்க அளவு மட்டுமே.