இரவில் இதை மட்டும் செய்யுங்கள் காலையில் உங்கள் முகம் பளபளக்கும்
S MuthuKrishnan
10-01-2025, 07:00 IST
www.herzindagi.com
பெண்களுக்கு பொதுவாக உள்ள பிரச்சனைகளில் ஒன்று முகக்கருமை. அதனைப் போக்கி உங்கள் முகத்தை பளபளக்க செய்ய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்
ஃபேஸ் வாஷ்
இரவில் படுக்கும் முன் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நன்கு கழுவ வேண்டும் இதற்கு நல்ல கிளன்சரை பயன்படுத்துங்கள். அதிலும் குறிப்பாக டபுள் கிளன்சிங் செய்யுங்கள்.
ஃபேஸ் மாஸ்க்
முகத்தை கழுவிய பின்னர் ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்துங்கள் இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது.
தூங்குவதற்கு முன் 15 நிமிடங்களுக்கு ஃபேஸ் மாஸ்கை உங்கள் முகத்தில் பயன்படுத்துவது நல்லது இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைசர்
தினமும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். குறிப்பாக ஹைலூரோனிக் அமிலம் மற்றும் நியாசினமைட் கொண்ட மாயசரைசர் சிறந்த தேர்வு.
சீரம்
வைட்டமின் சி மற்றும் கிளைக்கோலிக் அமிலம் கொண்ட சீரம் படுக்கைக்கு செல்வதற்கு முன் முகத்தில் தடவலாம் இது சருமத்தின் PH அளவை சமநிலைப்படுத்தும்.
தண்ணீர்
படுக்கைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சருமம் மற்றும் உடலின் நீரேற்றம் அதிகரிக்கும். இரவில் காஃபின் கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது.
லிப் மாஸ்க்
உதடுகளை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க லிப் மாஸ்க் உதவும், இதனை இரவில் பயன்படுத்துவதால் சிறந்த பலன் கிடைக்கும்.
கருவளையம்
கண்களுக்கு கீழே உள்ள கருமையை நீக்க நைட் கிரீம் பயன்படுத்தலாம். இது தவிர கண்களுக்கு கீழே உள்ள கருமையை நீக்க ஐ ஜெல் உபயோகிப்பதால் கருமை நீங்கி கண்களை சுற்றி உள்ள சுருக்கங்கள் குறையும்.
முகப்பரு
முகப்பருவை குறைக்க சாலிசிலிக் அமிலம் மற்றும் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் முகப்பரு குறையும்.