கன்னத்தில் குழி விழுவது நோயா? இது எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
Alagar Raj AP
13-09-2024, 14:00 IST
www.herzindagi.com
சிலருக்கு கன்னத்தில் குழி விழுவதை பார்த்து ரசித்திருப்போம் அல்லது நமக்கே கன்னத்தில் குழி விழும். ஆனால், எதனால் கன்னத்தில் குழி விழுகிறது என்று யோசித்தது உண்டா? இந்த பதிவில் கன்னத்தில் குழி விழுவதற்கான அறிவியல் காரணங்களை பார்ப்போம்.
ஜிகோமாடிகஸ் மேஜர்
ஜிகோமாடிகஸ் மேஜர் என்றும் அழைக்கப்படும் முகத்தசை முகபாவனையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, கன்னத்தில் குழி விழுவதற்கும் இந்த தசை தான் காரணம்.
தசை வளர்ச்சி அடையாமை
கருவின் வளர்ச்சியின் போது ஜிகோமாடிகஸ் மேஜர் தசை சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதால் தான் கன்னத்தில் குழி விழுகிறது.
மரபணு நோய்
டிம்பிள்ஸ் குறைபாடு என்று அழைக்கப்படும் இந்த மரபணு நோய் பெற்றோர்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குழி விழுவதற்கான வாய்ப்பு
பெற்றோர்கள் யாராவது ஒருத்தருக்கு ஒரு பக்கம் மட்டும் கன்னத்தில் குழி இருந்தால் பிறக்கப் போகும் குழந்தைக்கு கன்னத்தில் குழி விழுவதற்கான வாய்ப்பு 25% அதிகம். அதுவே, பெற்றோர்கள் யாராவது ஒருவருக்கு இரு பக்கமும் கன்னத்தில் குழி இருந்தால் பிறக்கப் போகும் குழந்தைக்கு குழி விழுவதற்கான வாய்ப்பு 50% அதிகம்.
இதனால் பிரச்சனையா?
இது மரபணு நோயாக இருந்தாலும் இதனால் எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கன்னத்துக் குழியின் வடிவம்
குறுகிய மற்றும் அகலமான முக அமைப்பை கொண்டவர்களுக்கு குறுகிய, வட்ட வடிவ குழி இருக்கும். அதுவே நீண்ட மற்றும் குறுகிய முக முக அமைப்பை கொண்டவர்களுக்கு ளமான, குறுகிய குழி இருக்கும்.