முகத்திற்கு கற்றாழை ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்க 7 காரணங்கள்
Alagar Raj AP
14-08-2024, 17:00 IST
www.herzindagi.com
தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் மிகவும் பிரபலமான மருந்துகளில் ஒன்றாக இருந்தாலும், அவை அனைவரின் சருமத்திற்கும் பொருந்தாது. எனவே யாரெல்லாம் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
ஒவ்வாமை
உங்களுக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்திய பிறகு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், அதை நீங்கள் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சிஸ்டிக் முகப்பரு
சிஸ்டிக் முகப்பரு எனப்படும் பெரிய வலி மிகுந்த முகப்பருக்கள் உங்களுக்கு இருந்தால் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டாம். கற்றாழை ஜெல்லின் அதிகப்படியான பயன்பாடு முகப்பருவை மோசமாக்கும்.
சன்ஸ்கிரீன்
நீங்கள் வெயிலில் செல்லும் போது கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்பட வாய்ப்புள்ளது.
காயங்கள்
கற்றாழை ஜெல் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தாலும், அவற்றை முகத்தில் காயம் உள்ள இடத்தில் தடவினால் காயம் மோசமாகும்.
ரெட்டினால்
ரெட்டினால் பயன்படுத்திய பிறகு கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதால் சிவத்தல் மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உணர்திறன் வாய்ந்த சருமம்
உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் என்றால் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் தோல் எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படலாம்.