குடியரசு தின ஸ்பெஷல்: 7 மூவர்ண உணவுகள்


Shobana Vigneshwar
2023-01-25,12:33 IST
www.herzindagi.com

மூவர்ணம்

  குடியரசு தினத்தன்று நமது தேசிய கொடியில் உள்ள ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உடை அணிவதில் தொடங்கி உணவுகள் வரை எல்லாமே இந்த மூவர்ணத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். அந்த வகையில் நம் தேசப்பற்றை உணர்த்தும் 7 மூவர்ண உணவுகளை இப்பதிவில் பார்க்கலாம்.

மூவர்ண சாலட்

  ஆரஞ்சு துண்டுகள், வட்டமாக நறுக்கிய வாழைப்பழம் மற்றும் பச்சை திராட்சையை கொண்டு மூவர்ண சாலட் தயாரிக்கலாம். தேசிய கொடி போல இந்த 3 நிற பழங்களையும் வரிசையாக அலங்கரித்து பரிமாரினால் மிகவும் அழகாக இருக்கும்.

மூவர்ண சாண்ட்விச்

  முதலில் ஒரு பிரட் துண்டின் மீது புதினா சட்னியை தடவவும். அதன் மேல் துருவிய பன்னீர் தூவி மற்றொரு பிரட் துண்டை வைக்கவும். அடுத்ததாக துருவிய கேரட் சேர்த்து இறுதியாக ஒரு பிரட் துண்டை வைத்து மூடவும். இதனை இரண்டாக வெட்டி பரிமாறினால் மூன்று நிறங்களும் அற்புதமாக தெரியும்.

மூவர்ண சாதம்

  ஆரஞ்சு நிற சாதத்திற்கு தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை பயன்படுத்தலாம். துருவிய தேங்காயில் வெள்ளை நிற சாதம் செய்யலாம். கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் கொண்டு பச்சை நிற சாதம் செய்து மூன்றையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரித்து பரிமாறலாம்.

மூவர்ண இட்லி

  இட்லி மாவுடன் அரைத்த தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து ஆரஞ்சு நிறத்திலும், புதினா, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து இட்லி மாவுடன் கலந்து பச்சை நிறத்திலும் இட்லி செய்யலாம். இதனுடன் எப்போதும் செய்யும் வெள்ளை நிற இட்லிகளை இடையில் வைத்து மூவர்ண இட்லியாக பரிமாறலாம்.

மூவர்ண ஐஸ்கிரீம்

  இதற்கு ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் கிவியை தனி தனியாக அரைத்து கொள்ளவும். முதலில் ஒரு டம்ளரில் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி உறைய வைக்கவும். அதன் பின் வாழைப்பழ அடுக்கு, இறுதியாக அரைத்த கிவி ஊற்றி மூவர்ண ஐஸ்கிரீம் தயாரிக்கலாம்.

மூவர்ண ரசகுல்லா

  பாலில் வினிகர் சேர்த்து திரிய வைக்கவும். வடிகட்டிய பாலாடை கட்டிகளை நன்கு மசித்து மாவு தயாரித்துக் கொள்ளவும். இதை மூன்று பாகங்களாக பிரித்து ஆரஞ்சு மற்றும் பச்சை நிற ஃபுட் கலர் சேர்த்து சர்க்கரைப்பாகில் வேக வைத்து எடுத்தால் சுவையான மூவர்ண ரசகுல்லா தயாராகிவிடும்.

மூவர்ண கேக்

  நீங்கள் எப்போதும் போல வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்து, அதனை மூவர்ண கிரீம்களால் அலங்கரிக்கலாம். நிச்சயமாக உங்கள் குழந்தைகள் இந்த மூவர்ண கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள்.

படித்ததற்கு நன்றி!

  வரும் குடியரசு தினத்தன்று இந்த ரெசிபிக்களை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.