குடியரசு தின ஸ்பெஷல் மூன்று வண்ண காய்கறி பொரியல்
sreeja kumar
2023-01-25,12:07 IST
www.herzindagi.com
மூன்று வண்ண பொரியல்
நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்றைய நாள் நாட்டு மக்கள் அனைவரும் வெவ்வேறு வகைகளில் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி மகிழ்ச்சி கொள்வார்கள். அந்த வகையில் உணவுகளிலும் தேச பற்றை வெளிப்படுத்த எல்லோர் வீடுகளிலும் மூன்று வண்ண காய்கறி பொரியல் கட்டாயம் இடம் பெறும்.
தேவையான பொருட்கள்
- கேரட் – 1 கப்
- பீன்ஸ் – 1 கப்
- தேங்காய் துருவல் – ¼ கப்
- கடுகு உளுந்து – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் - 2
- உப்பு – தேவையான அளவு
ஸ்டெப் 1
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
ஸ்டெப் 2
பின்பு அதில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஸ்டெப் 3
இப்போது அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுத்து, காய்கறிகளை வேக வைக்க ½ கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடவும்.
ஸ்டெப் 4
5 நிமிடம் கழித்து பார்த்தால் கேரட் – பீன்ஸ் நன்கு வெந்து வந்து இருக்கும். இப்போது அதில் துருவிய தேங்காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஸ்டெப் 5
இறுதியாக தேங்காயுடன் காய்கறிகளை நன்கு கலந்து பரிமாறினால் சூப்பரான மூன்று வண்ண பொரியல் தயார்.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.