பழங்களை வைத்து மூவர்ண ஐஸ்கிரீம்


Shobana Vigneshwar
2023-01-25,10:42 IST
www.herzindagi.com

மூவர்ண உணவுகள்

  குடியரசு தினத்தன்று ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் இட்லி, பிரியாணி, இனிப்புகள், புட்டு போன்ற பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இம்முறை கொஞ்சம் வித்யாசமாக பழங்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ் கிரீம் செய்ய கற்றுக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

 • ஆரஞ்சு -2
 • வாழைப்பழம் - 1
 • கிவி - 1
 • பால் -½ கப்
 • தண்ணீர் -½ கப்
 • சர்க்கரை -6 டீஸ்பூன்

ஸ்டெப் 1

  ஆரஞ்சு பழத்தின் ஜூஸ் எடுத்து அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதனை வடிகட்டி தனியாக வைக்கவும். ஆரஞ்சிற்கு பதிலாக முலாம் பழத்தையும் பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 2

  ஐஸ்கிரீம் மோல்டு அல்லது டம்ளரை மூன்று பகுதிகளாக பிரித்து, முதலாவதாக தயாராக வைத்துள்ள ஆரஞ்சு ஜூஸை ⅓ அளவுக்கு நிரப்பி, 1 மணி நேரத்திற்கு உறைய வைக்கவும்.

ஸ்டெப் 3

  வாழைப்பழம், பால் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்கவும். இதனை வடிகட்டி உறைந்த ஆரஞ்சு ஜூஸ் மீது ஊற்றி மறுபடியும் 1 மணி நேரத்திற்கு உறைய வைக்கவும்.

ஸ்டெப் 4

  கிவியுடன் தண்ணீர் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஜூஸ் தயாரித்து கொள்ளவும். பின் இதனை வடிகட்டி வெள்ளை நிற வாழைப்பழ அடுக்கின் மேல் ஊற்றவும்.

ஸ்டெப் 5

  இந்த கட்டத்தில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருகி உறைய வைக்கவும். குறைந்தது 5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் உறைய வைக்க வேண்டும்.

ஸ்டெப் 6

  உறைந்த ஐஸ்கிரீம்களை மோல்டில் இருந்து நீக்கி உண்டு மகிழுங்கள். இந்த குடியரசு தினத்தன்று இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள், குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

படித்ததற்கு நன்றி!

  இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.