பெண்ணுறுப்பில் இருந்து வாயு வெளியேறுவதன் காரணங்கள்
Alagar Raj AP
21-04-2025, 14:53 IST
www.herzindagi.com
பெண்ணுறுப்பு வாயு
பிறப்புறுப்பில் இருந்து வாயு வெளியேறுவது என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான உடல் செயல்பாடாகும். இது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சில காரணங்கள் உள்ளன.
உடலுறவு
உடலுறவின் போது பெண்களில் பிறப்புறுப்பில் காற்று சிக்கிக்கொள்ளும். அதனால் உடலுறவின் போது அல்லது உடலுறவுக்கு பிறகு பிறப்புறுப்பில் இருந்து வாயு வெளியேறும்.
இறுக்கமான தசைகள்
இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அழுதப்படுத்தும் போது பெண்ணுறுப்பில் வாயு வெளியேறும். குறிப்பாக உடற்பயிற்சி, யோகா செய்யும் போது இது நிகழலாம்.
மாதவிடாய்
மாதவிடாய் காலத்தில் மென்ஸ்ட்ருவல் கப் அல்லது டம்பான் பயன்படுத்தும் போது பிறப்புறுப்பின் உள்ளே காற்று சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது. அதன் பின் அதை அகற்றும் போது அல்லது உடல் அசைவுகள் காரணமாக வாயு வெளியேறும்.
கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் இடுப்பு தசைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக காற்று உள்ளே சென்று சிக்கிக்கொண்டு மீண்டும் இடுப்பு தசை தளர்வடையும் போது வாயுவாக வெளியேறும்.
செரிமான பிரச்சனையா?
சிலர் செரிமான பிரச்சனைகளால் பெண்ணுறுப்பில் இருந்து வாயு வெளியேறுவதாக கருதுகின்றனர். ஆனால் செரிமானத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் தான் பெண்ணுறுப்பில் இருந்து வரும் வாயு துர்நாற்றம் அடிப்பதில்லை.
குறிப்பு
பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் வாயு துர்நாற்றம் வீசினால் அது சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இது போன்ற சூழ்நிலையில் மருத்துவரை அணுகுவது முக்கியம்.