12 ஆம் வகுப்புக்கு பிறகு வழக்கறிஞராக என்ன படிக்க வேண்டும்?


Alagar Raj AP
25-03-2025, 18:17 IST
www.herzindagi.com

கல்வித் தகுதி

    12 ஆம் வகுப்பில் எந்த குரூப்பாக இருந்தாலும் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு அதிக சதவீதத்துடன் உடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்

    தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர CLAT, AILET போன்ற தேசிய அளவிலான சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மாநில சட்டப் பல்கலைக்கழகம்

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 12 ஆம் வகுப்பு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

3 ஆண்டு பட்டப்படிப்பு

    மூன்று ஆண்டுகள் சட்ட இளங்கலை படிப்பான LLB படிப்பை தேர்வு செய்யலாம்.

5 ஆண்டு பட்டப்படிப்பு

    BA LLB, BBA LLB, BCom LLB போன்ற 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளங்கலை சட்ட படிப்பையும் தேர்வு செய்யலாம்.

இன்டர்ன்ஷிப்

    படிக்கும் போதே சட்ட நிறுவனங்கள் அல்லது மூத்த வழக்கறிஞர்களிடம் சேர்த்து இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்திய பார் கவுன்சில்

    சட்டப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, இந்திய பார் கவுன்சிலால் நடத்தப்படும் AIBE தேர்வில் தேர்ச்சி பெற்று வழக்கறிஞர் பணியை தொடரலாம்.