குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்த வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க!
Jansi Malashree V
18-03-2024, 13:40 IST
www.herzindagi.com
இரண்டு வயதாகியும் சில குழந்தைகளுக்குக் கை சூப்பும் பழக்கம் இருக்கும். இதைத் தடுக்க வேப்பெண்ணெய் தடவுவது, கைகளில் பேன்ட் ஏட், டேப், கையுறை அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
பாதிப்புகள்:
குழந்தைகள் கை சூப்பும் போது, விரல்களில் உள்ள அழுக்குகள் நேரடியாக வயிற்றுகுள் போய்விடும். இதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதோடு பற்களின் வரிசையும் முறையாக இருக்காது. எதிர்காலத்தில் அவர்களின் முக அழகைக் கெடுத்துவிடும்.
கலைத்திறனில் ஈடுபடுத்துதல்:
கை சூப்பும் குழந்தைகளுக்குக் கையில் காயங்களை ஏற்படுத்துவதை விட, பழக்கத்தை மறக்க செய்வதற்கு அவர்களது கைகளில் ஸ்கெட்ச், கலர் பென்சில் போன்றவற்றைக் கொடுக்கவும். அதை வைத்து ஏதாவது கிறுக்கும் போது கை சூப்பும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
விளையாடுதல்:
குழந்தைகளுக்குக் கைகளில் பொம்மைகளைக் கொடுத்து விளையாட அனுமதிக்கவும். விரல்களுக்கு ஏதாவது வேலைக் கொடுக்கும் போது கைகளை வாய்க்குக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
கவனிப்பு அவசியம்:
குழந்தைகளில் சிலர் தூங்கும் போது வாயில் விரலை வைப்பார்கள். இந்த பழக்கம் அவர்களை எப்போதும் கை சூப்புவதை நிறுத்த விடாது. எனவே பெற்றோர்கள் குழந்தைகள் தூங்கும் போது வாயில் விரல் வைத்திருந்தால் எடுத்து விடவும்.
இதுபோன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலே, எவ்வித வலியையும் ஏற்படுத்தாமல் குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்திவிட முடியும்.