இரவு நேரத்தில் மொபைல் பயன்படுத்தினால் இந்த பாதிப்புகள் நிச்சயம்!


Jansi Malashree V
27-03-2024, 12:49 IST
www.herzindagi.com

    மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் மனநிலை மாற்றம் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

    நாள் முழுவதும் மொபைல் போன்களைப் பயன்படுத்தினாலும், எவ்வித இடையூறு இல்லாமல் இரவு நேரத்தில் மொபைல் பார்க்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். இதைத் தொடர்ந்து நீங்கள் மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதோ அதன் லிஸ்ட் இங்கே.

மொபைல் அடிமை:

    இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ளனர். வேண்டாம் என்று நினைத்தாலும் நமது கைகள் மொபைலின் பக்கம் தான் செல்லும். இவ்வாறு மொபைலுக்கு அடிமையானவர்கள் தாமாகவே மீண்டு வந்தால் தான் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்.

ஆய்வு சொல்வது என்ன?

    இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் போது, நிரந்தமாக தூக்கத்தைத் தொலைக்க நேரிடும் என அமெரிக்க மருத்துவ அகாடமி சமீபத்தில் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மெலனின் பாதிப்பு:

    பொதுவாக நாம் அனைவரும் உரிய நேரத்தில் தூங்குவதற்கு ஒரு உதவியாக உள்ளது மெலடோன் உற்பத்தி. இதில் பாதிப்பு ஏற்படும் போது நம்மால் சரியாக தூங்க முடியாது. பொதுவாக இரவில் மிகவும் ஆர்வத்துடன் வீடியோக்கள் பார்க்கும் போது தூக்கம் கலையக்கூடும். இதனால் மெலடோனின் உற்பத்தியும் ஒருபுறம் குறைய ஆரம்பிக்கும்.

நிரந்தப் பாதிப்பு:

    இவ்வாறு ஒவ்வொரு நாளும் நம்முடைய தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் போது, நிரந்த தூங்க பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே இரவில் மொபைல் போன்களைப் பயன்படுத்தக்கூடாது.

    என்ன தான் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களுக்கு பல வகைகளில் உதவியாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது கடுமையாக உடல் நல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே எச்சரிக்கையுடன் மொபைல் போன்களைப் பயன்படுத்த தொடங்குங்கள்.