பெற்றோர்களின் விவாகரத்தால் பிள்ளைகளுக்கு இளம் வயதில் ஏற்படும் பாதிப்புகள்
Alagar Raj AP
11-09-2024, 15:42 IST
www.herzindagi.com
பிள்ளைகள் இளம் வயதில் இருக்கும் போது பெற்றோர்கள் விவாகரத்து செய்வதால் அவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்வி செயல்திறன்
பெற்றோரின் விவகாரத்தால் பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் இதனால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
குற்ற உணர்ச்சி
குழந்தைகளுக்கு அறியாத வயது என்பதால் பெற்றோர் பிரிந்து சென்றதற்கு காரணம் நான் தான் என்ற குற்ற உணர்ச்சி உண்டாகும்.
சமூக ஆர்வம் இழப்பு
பெற்றோர்களின் விவாகரத்து பிள்ளைகளை சமூக ரீதியாகவும் பாதிக்கும். மற்ற குழந்தைகளை பெற்றோருடன் பார்க்கும் போது இது அவர்களை தனிமையாக உணர செய்யும்.
கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள்
பெற்றோர்களின் விவாகரத்து பிள்ளைகளை தனிமையாக உணர செய்யும். இதனால் கோபம், குழப்பம், பதட்டம் போன்ற கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள் அவர்களை தவறான பாதைக்கு கூட அழைத்து செல்லலாம்.
மாற்றத்தில் சிரமம்
விவகாரத்தால் பிள்ளைகளின் வாழ்க்கை மொத்தமாக மாறும். இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்வதற்கு சிரமப்படுவார்கள். இதனால் வீடு, சூழல், கல்வி என்று அனைத்தும் பாதிக்கும்.
நம்பிக்கை இழப்பு
பெற்றோர்கள் பிரிவு பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே உறவுகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்யும். இந்த தாக்கம் பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களின் காதல், குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.