நண்பர்கள் தினத்தன்று உங்கள் நண்பர்களுக்கு இந்த தனித்துவமான பரிசுகளை கொடுங்க


Alagar Raj AP
26-07-2024, 15:00 IST
www.herzindagi.com

நண்பர்கள் தினம் 2024

    நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த சிறப்பான நாளில் உங்கள் நண்பர்களுக்கு கொடுக்க சில தனித்துவமான பரிசுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மொபைல் பேக் கேஸ்

    உங்கள் நண்பருக்கு பிடித்த ஏதாவது வாக்கியம் அல்லது பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மொபைல் பேக் கேஸில் அச்சிட்டு பரிசாக வழங்கலாம்.

அச்சிடப்பட்ட டி-ஷர்ட்

    உங்கள் நட்பு வட்டாரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை அல்லது நட்பை வெளிக்காட்டும் சினிமா டயலாக் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை பரிசாக கொடுக்கலாம்.

புகைப்பட சட்டகம்

    சிறு வயதில் இருந்து நீங்கள் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் கூடிய புகைப்பட சட்டகத்தை பரிசளிக்கலாம். அது உங்கள் பால்ய பருவத்தை நினைவு கூறும் விதமாக அமையும்.

ப்ளூடூத் ஸ்பீக்கர்

    உங்கள் நண்பன் இசை பிரியராக இருந்தால் அவருக்கு பிடித்த இசையமைப்பாளர் புகைப்படம் பதித்த ப்ளூடூத் ஸ்பீக்கரை பரிசாக கொடுக்கலாம்.

பிரெண்ட்ஷிப் பேண்ட்

    என்னதான் பல பரிசுகள் இருந்தால் பிரெண்ட்ஷிப் பேண்ட் போல் வராது என்று கூறலாம். உங்கள் நட்பை பிரதிபலிக்கும் வார்த்தையை பிரெண்ட்ஷிப் பேண்டில் அச்சிட்டு கொடுத்தால் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.