40 வயதில் எலும்பின் வலிமையை அதிகரிக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
Alagar Raj AP
08-03-2024, 12:15 IST
www.herzindagi.com
நீங்கள் 40 வயது பெண்ணா, உங்கள் எலும்புகள் வாழ்நாள் முழுவதும் வலுவாக இருக்க இந்த வயதில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.
புரதம்
எலும்பு அடர்த்தியை நிலைநிறுத்துவதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பனீர், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை கோழி அல்லது மீன் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின்கள் டி மற்றும் கே
வைட்டமின்கள் டி மற்றும் கே எலும்பு வளர்ச்சிக்கும், கால்சியம் அதிகரிப்புக்கும் முக்கியமாக இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கரு, பால் சாப்பிடுவதால் வைட்டமின் டி கிடைக்கும். கீரை, வெந்தயம் சாப்பிடுவதால் வைட்டமின் டி கிடைக்கும்.
மெக்னீசியம் மற்றும் துத்தநாகம்
சிறந்த எலும்பு ஆரோக்கியத்திற்காக உங்கள் உணவில் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் அவசியம். மெக்னீசியத்திற்காக, ராஜ்மா, வாழைப்பழங்கள் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். முந்திரி, கொண்டைக்கடலை மற்றும் பருப்புகளை சாப்பிடுவதால் துத்தநாகத்தை பெற முடியும்.
கால்சியம்
எலும்பின் அமைப்பையும் வலிமையையும் பராமரிக்க கால்சியம் அவசியம், அதற்கு பால், பன்னீர், தயிர், கீரை மற்றும் ராகி போன்ற உணவுகளை உட்கொள்வதால் கால்சியம் கிடைக்கும்.
ஒமேகா 3
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அவற்றின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு நன்கு அறியப்பட்டவை. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆளி விதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் மூலம் ஒமேகா 3 கொழுப்பை பெறலாம்.
இந்த தகவலை 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு பகிரவும். மேலும் இது போன்ற மற்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.