மன வலிமையுடன் இருக்க உங்களிடம் இருக்க வேண்டிய 7 பழக்கங்கள்


Alagar Raj AP
04-10-2024, 16:34 IST
www.herzindagi.com

தன்னம்பிக்கை வேண்டும்

    எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை உங்களை மனதளவில் பலமாக வைத்திருக்கும்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்

    உணர்ச்சிவயப்பட்டு எடுக்கும் முடிவு உங்களை மோசமான சூழ்நிலைக்கு தள்ளும் என்பதால் எந்தவொரு செயலுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க கூடாது. உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேற வேண்டும்

    மனரீதியாக வலிமையுடன் இருக்கும் நபர்களிடம் இருக்கும் முக்கியமானது ஆறுதல் மண்டலத்தில் தங்காமல் இருப்பது. ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளிவந்தால் மட்டுமே வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

வளைத்துக்கொடுக்க வேண்டும்

    சூழலுக்கு ஏற்றவாறு வளைத்துக் கொடுக்கும் தன்மை வெற்றிக்கு முக்கியமானது. வளைத்துக்கொடுத்தால் மட்டுமே நீங்கள் நினைத்த இலக்கை அடைய முடியும்.

தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்

    பலருக்கு தங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிவு இருக்காது. நீங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு அந்த தவறு மீண்டும் நடக்காதவாறு செயல்பட வேண்டும்.

யாரையும் நம்பி இருக்க கூடாது

    எல்லா நேரமும் யாராவது நம்முடன் துணையாக இருப்பார்கள் என்று நினைக்க கூடாது. நம்முடன் யாராவது துணையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்

    தலைவர்கள் கொண்டிருக்கும் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது. குடும்பமோ, வேலையையோ உங்களுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.