வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கஸ்டடி திரைப்பட டீசர், எப்படி உள்ளது?


Balakarthik Balasubramaniyan
2023-03-17,14:12 IST
www.herzindagi.com

என்ன தான் ஸ்பெஷல்

  டீசரில் வரும் வசனங்கள் உடம்பை சிலிர்க்க செய்கிறது. ‘காயப்பட்ட மனசு ஒருத்தர எந்த லெவலுக்கு வேணும்னாலும் கொண்டு போகும்.’, ‘நான் கையில எடுத்துருக்குற ஆயுதம், ஒரு நிஜம்’, ‘நிஜத்த எவ்வளவு ஆழமா பொதைச்சாலும் அது திமிறிக்கிட்டு வெளியில வந்தே தீரும்.’ போன்ற வசனங்கள் படத்துக்கு பிளஸ்.

கஸ்டடி டைட்டில்

  மங்காத்தாவில் ‘A Venkat prabhu Game, மாநாடு திரைப்படத்திற்கு A Venkat Prabhu Politics’ இந்த வரிசையில் கஸ்டடிக்கு இவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் ‘A Venkat Prabhu Hunt’.

யார் இசை?

  சமீப காலமாக இளையராஜாவின் பாடல் மற்றும் இசை மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் கஸ்டடியின் பாடல்களும் ஹிட் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

யாரெல்லாம் கஸ்டடியில் உள்ளனர்?

  ஹீரோவாக நாக சைத்தான்யா, ஹீரோயினாக ‘புல்லட்டு பாடல் புகழ்’ கிருத்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த் சாமி என பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பான் இந்தியா திரைப்படமா கஸ்டடி?

  இத்திரைப்படம் பான் இந்தியா வரிசையில் இடம்பெறாவிட்டாலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகிறது.

மொழி ஒற்றுமை ஓங்குகிறதா?

  இசைக்கு மொழியில்லை என்பதை போல, திறமைக்கும் மொழி முக்கியமில்லை என்பதை வாரிசு, வாத்தி போன்ற பல திரைப்படங்கள் சுட்டிக்காட்டி வருகிறது. தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டுவது போல, வெங்கட்பிரபு தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

எப்போது ரிலீஸ்?

  இத்திரைப்படம் 12 மே 2023 அன்று திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மங்காத்தா, மாநாடு, சென்னை 60028 போன்ற வெங்கட்பிரபுவின் பல வெற்றி பட வரிசையில் கஸ்டடியும் கல்லாக்கட்டும் என நம்பலாம்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.