வரிசைக்கட்டும் திரிஷா படங்கள், கல்லா கட்டுமா?


Alagar Raj AP
19-03-2025, 18:08 IST
www.herzindagi.com

திரிஷா

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள திரிஷா 40 வயதை கடந்தாலும் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

விடாமுயற்சி

    அஜித்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது.

கைவசம் உள்ள படங்கள்

    இந்நிலையில் திரிஷா கைவசம் என்னென்ன படங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

குட் பேட் அக்லி

    அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள குட் பேட் அக்லி படத்திற்குரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

தக் லைஃப்

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வம்பரா

    தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற படமும் திரிஷா கைவசம் உள்ளது.

சூர்யா 45

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ராம்

    மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் திரிஷா நடித்து முடித்துள்ளார்.