டாய்லெட் ஃபிளஷில் எதற்கு இரண்டு பட்டன்கள் இருக்கு தெரியுமா?
Alagar Raj AP
20-11-2024, 15:30 IST
www.herzindagi.com
டூயல் ஃப்ளஷ் டாய்லெட்
நவீன கழிப்பறையில் ஃபிளஷில் இரண்டு பட்டன்கள் இருப்பதை பார்த்திருப்போம். இப்படி இரண்டு பட்டன்கள் இருக்கும் கழிப்பறை 'டூயல் ஃப்ளஷ் டாய்லெட்' என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு பட்டன்கள்
இரண்டு பட்டன்களில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறிதாகவும் இருக்கும். இந்த இரண்டு பட்டன்களும் கழிப்பறையை சுத்தப்படுத்துவதற்கு இருந்தாலும் இரண்டிற்கும் தனித்தனி பயன்பாடு உள்ளது.
தண்ணீர் வெளியேற்றம்
பெரிய பட்டனை அழுத்துவதால் 6-9 லிட்டர் தண்ணீர் வெளியேறும். சிறிய பட்டன் 3 முதல் 4.5 லிட்டர் தண்ணீர் வெளியேறும்.
பயன்பாடு
பெரிய பட்டனை திடக்கழிவுகளை சுத்தப்படுத்துவதற்கும், சிறிய பட்டனை திரவக் கழிவுகளை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் சேமிப்பு
இந்த இரண்டு பட்டன்களை அதற்கான தேவைகளுக்கு சரியாக பயன்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் 20,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
இது யாருக்கான கழிவறை?
தண்ணீரைச் சேமிக்க விரும்புவோருக்கும், அதனால் உயரும் மின்சார கட்டணத்தை சேமிக்க விரும்புவோருக்கும் டூயல் ஃப்ளஷ் டாய்லெட்டை வீட்டில் பயன்படுத்த சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், இவை விலை உயர்ந்தவை மற்றும் அதிக பராமரிப்பு தேவைப்படும்.
வரலாறு
டூயல் ஃப்ளஷ் டாய்லெட் நுட்பம் அமெரிக்க தொழில்துறை வடிவமைப்பாளர் விக்டர் பாபனெக்கின் என்பவரின் யோசனையாகும். இருப்பினும், உலகில் முதன்முறையாக 1980 இல் ஆஸ்திரேலியாவில் டூயல் ஃப்ளஷ் டாய்லெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.