இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அனைத்து வயதினரும் சாப்பிட வேண்டிய உணவுகள்
Sanmathi Arun
2023-03-19,18:57 IST
www.herzindagi.com
மீன்
சால்மன், மத்தி, நெத்திலி,மெர்குரி அளவு கம்மியான மீன்கள் போன்றவற்றில் ஏராளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நட்ஸ்
நட்ஸ் நல்ல கொழுப்பை (HDL) உயர்த்தி, கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது. தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிட்டு வந்தால், இதய நோய் ஏற்படும் அபாயம் பாதியாக குறைகிறது.
தக்காளி
தக்காளியில் லைகோபீன், வைட்டமின் C & A,, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களின் கலவையானது இருதய நோய்களைத் தடுக்கிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆப்பிளில் காணப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற ஃபிளாவனாய்டு சேர்மங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
பெர்ரிகள்
8 வாரங்களுக்கு தினமும் ஒரு கப் பெர்ரிகளை கலந்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீ இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது.
டார்க் சாக்லேட்
தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
வாழைப்பழங்கள்
வாழைப்பழம், பொட்டாசியம் நிறைந்தது, அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றவும், ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் பொட்டாசியம் சிறுநீரகங்களுக்கு உதவுகிறது.
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்