அது என்ன 100 நாள் இருமல்? குழந்தைகளை பாதித்தால் இது விடாது!


Alagar Raj AP
28-02-2024, 10:00 IST
www.herzindagi.com

100 நாள் இருமல்

    100 நாள் இருமல் கக்குவான் இருமல் என்றும் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாக பெர்டுசிஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

100 நாள் இருமல் பரவ காரணம்

    Bordetella pertussis எனப்படும் பாக்டீரியா சுவாசம் மூலமாக மனிதர்களை தாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல் அல்லது பேசும் போது பாக்டீரியா மற்றவர்களுக்கு பரவும். இது குழந்தைகளை பாதித்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்தாக அமையும்.

100 நாள் இருமல்லின் தனித்துவம்

    இந்த நோயால் பாதிக்கப்பட்டால் இருமல் பிரச்சனை மாத கணக்கில் இருக்கும். இருமல் ஏற்படும் போது வறட்டு இருமல் போன்ற தனித்துவமான ஒளி ஏற்படும்.

ஆரம்ப அறிகுறிகள்

    இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்க்கு 1 முதல் 2 வாரங்களில், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல் லேசான காய்ச்சல் போன்ற சாதாரணமான அறிகுறிகள் இருக்கும்.

பிந்தைய அறிகுறிகள்

    இந்த நோயால் பாதிக்கப்பட்டு 2 முதல் 10 வாரங்களுக்குப் பிறகு காய்ச்சல் பாதிப்பு குறைந்து விடும் ஆனால் இருமல் பாதிப்பு மோசமான நிலைக்கு அதிகரிக்கும். மேலும் வாந்தி, சோர்வு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

தடுப்பு முறை

    இந்த நோயால் பாதிக்கபட்டவர்களிடம் விலகி இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்த கூடாது. முகக்கவசம் அணிவது நோய் தொற்றை தடுக்கும்.

சிகிச்சை

    குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களை இந்த நோய் பாதிக்காமல் இருக்க டிப்தீரியா டெட்டானஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.