பயம் தரும் வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறிகள்
sreeja kumar
2023-01-27,14:39 IST
www.herzindagi.com
வைட்டமின் D குறைபாடு
இந்தியாவில் பலரும் வைட்டமின் D குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு வருவதாக பல்வேறு ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. வைட்டமின் D குறைபாடு பிரச்சனையில் அலட்சியம் காட்டாமல் அதனை முன்பே கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு முதலில் வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் வலி
அடிக்கடி நோய் ஏற்படுதல், உடல் சோர்வு, மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, முடி உதிர்தல், எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி போன்றவை வைட்டமின் D குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியம்
வைட்டமின் D குறைபாடு கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி எலும்புகளை பாதிக்கும் தன்மை கொண்டது, இது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
முக்கிய அறிகுறிகள்
திடீரென்று உடல் எடை அதிகரிப்பது, எலும்பு அழற்சி, மூச்சுக்குழாய் மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுப்பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுவது வைட்டமின் D குறைப்பாட்டின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். எனவே எப்போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
உணவு முறை
பால், சிக்கன், மீன், முட்டை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம். வைட்டமின் D நிறைந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.
சூரிய ஒளி
உடலுக்கு தேவையான வைட்டமின் D சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு காலை 10.30 முதல் 12 மணி வரையிலான ஏதாவதொரு நேரத்தில் 20 நிமிடங்கள் வெயிலில் நிற்க வேண்டும்.
நல்ல தூக்கம்
உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல தூக்கம் மிக மிக அவசியம். மூளையில் எப்போதும் சிந்தனைகளை நிரப்பாமல் சில மணி நேரங்கள் ஓய்வு தருவது மிகவும் நல்லது. ஆழ்ந்த தூக்கம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.