லோ பிபி-யை சீராக்க நீங்கள் செய்ய வேண்டியவை


Alagar Raj AP
01-12-2024, 09:46 IST
www.herzindagi.com

குறைந்த இரத்த அழுத்தம்

    உயர் இரத்த அழுத்தம் எவ்வளவு ஆபத்தானதோ அதே போல் குறைந்த இரத்த அழுத்தமும் ஆபத்தானது. உடலில் நீர்ச்சத்து குறைவது, ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

அறிகுறிகள்

    பொதுவாக 120/80 mmHg என்ற இரத்தம் அழுத்தம் இருப்பது சாதாரணமாக கருதப்படுகிறது. அதுவே 90/60 mmHg-க்கு குறைவாக இருந்தால் அது குறைந்த இரத்தம் அழுத்தமாகும். இதனால் தலைசுற்றல், குமட்டல், மயக்கம், கண் பார்வை மங்குதல், உடல் குளிர்ச்சியாக மாறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

என்ன செய்ய வேண்டும்?

    எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

நீரேற்றம்

    உடலில் நீரிழப்பை சரி செய்ய நிறைய தண்ணீர் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும் அல்லது நிறைய திரவங்கள் நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.

மெதுவாக நகரவும்

    நாட்பட குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் உட்கார்ந்து இருக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது வேகமாக எழுத்தால் இரத்த அழுத்தம் குறையும். இதனால் மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

மதுவை தவிர்க்கவும்

    மது மற்றும் காஃபின் பாணங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

உப்பு உணவுகள்

    பொதுவாக உப்பு உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் உப்பு உணவுகளை சாப்பிடுங்கள். ஆனால் அதிகமாக சாப்பிடுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

உடற்பயிற்சி

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும் இரத்த அழுத்தம் குறையும். எனவே அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்வது நல்லது.

ஊட்டச்சத்து உணவுகள்

    இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இறைச்சி, முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள் போன்ற வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.