கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால் தோலில் ஏற்படும் அறிகுறிகள்!
Alagar Raj AP
16-05-2024, 12:16 IST
www.herzindagi.com
கொழுப்பு கல்லீரல் நோய்
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவதே கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படுகிறது. இது அதிக உடல் பருமன், எடை இழப்பு, நீரிழிவு, மது அருந்துதல் போன்றவற்றால் ஏற்படும் கல்லீரல் நோயாகும்.
வீக்கம்
உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால் உறுப்புகளில் புரத உற்பத்தி பாதிக்கும், சருமத்திற்கு இரத்த ஓட்டம் பாதிக்கும். இது முக வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
தோல் அரிப்பு
பொதுவாக கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பவர்களுக்கு சொறி இல்லாமல், தோல் அரிப்பு பிரச்சனை இருக்கும். இது பகலை விட இரவில் மோசமாக அரிக்கும்.
தோல் நிறம் மாறுதல்
கொழுப்பு கல்லீரல் நோய் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஹார்மோன் வளர்சிதை மாற்றம் பாதித்து தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும்.
தடிப்புகள்
கொழுப்பு கல்லீரல் நோய் உடலில் துத்தநாகக் குறைபாட்டை ஏற்படுத்தும், இதன் விளைவாக தோல் பிரச்சினைகள், தோல் அழற்சி, வாயைச் சுற்றி எரிச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்படும்.
பால்மர் எரித்மா
பால்மர் எரித்மா என்பது கொழுப்பு உள்ளங்கைகள் மற்றும் விரல் நுனிகள் சிவப்பு நிறத்தில் மாறுதல். கொழுப்பு கல்லிரல் நோயால் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மற்றும் இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவதால் உள்ளங்கைகள் சிவக்கும்.
கழுத்து தோல் கருமை
கொழுப்பு கல்லீரல் நோயால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் அகாந்தோஸிஸ் நிக்ரிகன்ஸ் என்ற பாதிப்பு ஏற்படும். இது கழுத்து மடிப்புகளில் தோலை கருமையாக்கும்.
ரோசாசியா
ரோசாசியா என்பது கொழுப்பு கல்லீரல் நோயால் ஏற்படும் நாள்பட்ட தோல் அலர்ஜி. இது முக்கியமாக மூக்கு மற்றும் கன்னங்களை சிவந்து போக செய்யும்.