உடல் எடையை கிலோ கணக்கில் குறைக்க உதவும் பானங்கள்


Sanmathi Arun
2023-01-27,15:57 IST
www.herzindagi.com

உடல் எடையை குறைக்க டிப்ஸ்

  குளிர்காலத்தில் உடல் எடையை விரைவாக குறைக்கவும், உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றவும் உதவும் சிறந்த பானங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

எலுமிச்சை டீ

  எலுமிச்சை மற்றும் தேன் கலந்த டீ உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த காலை பானமாகும். எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத் தூண்டுதலுக்கும் உதவுகின்றன.

நெல்லிக்காய் சாறு

  இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீருடன் காலை வெறும் வயற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

கிரீன் டீ

  கிரீன் டீ உடல் எடையை குறைக்கும் ஒரு சிறந்த காலை டிடாக்ஸ் பானமாகும். உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

ஓமம் தண்ணீர்

  உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஓமம் தண்ணீர் தொடர்ந்து குடிக்க வேண்டும். 1 ஸ்பூன் ஓமத்தை 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

இஞ்சி டீ

  இஞ்சி டீ வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்திற்கு சிறந்தது. தினமும் காலையில் ஒரு கப் இஞ்சி டீ குடிக்கத் தொடங்கினால் எடை குறைப்பிற்கும் உதவி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன்

  இலவங்கப்பட்டை எப்போதும் ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், ஏனெனில் இது உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவுகிறது. இந்த கலவை எடையைக் குறைக்க உதவுகின்றன.

சியா விதைகளுடன் எலுமிச்சை நீர்

  எலுமிச்சை தண்ணீர் மற்றும் சியா விதைகள் இரண்டும் எடை குறைப்புக்கு நன்மை பயக்கும். இந்த கலவையானது எடை குறைப்பு மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வழங்கும்.

படித்ததற்கு நன்றி

  இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.