உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் கரும்புச்சாறு குடிக்காதீங்க..!


Alagar Raj AP
23-03-2024, 15:00 IST
www.herzindagi.com

    கரும்புச்சாறு குடிப்பதால் பல நன்மைகள் இருந்தாலும் அனைவரும் கரும்புச்சாறு அருந்த முடியாது. ஏனெனில் கரும்பு சாறு சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.

சர்க்கரை நோயாளிகள்

    சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்கவும், ஏனென்றால் கரும்புச் சாற்றில் சர்க்கரைச் சத்து அதிகம். இதனை குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

பலவீனமான செரிமான அமைப்பு

    கரும்புச்சாறில் உள்ள பாலிகோசனால் எனப்படும் அமிலம் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள் கரும்பு சாறு குடிக்க வேண்டாம்.

தூக்கமின்மை

    தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கரும்புச்சாறு குடிக்க வேண்டாம். இதில் உள்ள பாலிகோசனால் அமிலம் உங்கள் தூக்கத்தை மோசமாக பாதிக்கும்.

காய்ச்சல்

    காய்ச்சல், சளி, இருமல் தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிக்கக் கூடாது. மீறியும் குடித்தால் பாதிப்பு அதிகரிக்கும்.

உடல் பருமன்

    உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கரும்புச்சாறு குடிக்க வேண்டாம். இதில் அதிக கலோரி மற்றும் சர்க்கரை இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பகிரவும். மேலும் இது போன்ற மற்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தை பின்தொடரவும்.