மலம் கழிக்கனும்னு தோணும் ஆனா வராது காரணம் என்ன ? 10 நிமிடத்தில் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்


S MuthuKrishnan
15-04-2025, 11:02 IST
www.herzindagi.com

    மலச்சிக்கல் மனிதருக்கு பல சிக்கலை ஏற்படுத்தும் என பழமொழியாக சொல்வார்கள். தற்போதைய நவீன காலத்து தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் மலச்சிக்கல் பிரச்சனையால் சிறு குழந்தைகள் முதல் நடுத்தர வயதினர் வரை பலரும் பாதித்து வருகின்றனர். மலச்சிக்கலை சரி செய்யும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

திரிபலா

    தினமும் காலை திரிபலாவை கொஞ்சம் தண்ணீர் அல்லது ஒரு ஸ்பூன் பால் மற்றும் தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இது இயற்கையாக பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது மேலும் வயிற்றின் தொப்பையை குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.

விளக்கெண்ணெய்

    தினமும் இரவு பாதி ஸ்பூன் விளக்கெண்ணையை சூடு செய்து தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடியுங்கள். இவ்வாறு செய்வதால் பெருங்குடல் சுத்தமாக இருக்கும்.

நெல்லிக்காய் சாறு

    நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது நெல்லிக்காயை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கவும்.

பால் பொருட்களை தவிர்க்கவும்

    பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அதிகப்படியாக பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது பெருங்குடலில் ஒட்டிக் கொள்ளும். இதனால் ஏற்படும் கழிவு பொருட்கள் உடலில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில் வராது.