இரத்த சோகை பாதிப்புக்கு உடலில் தெரியும் அறிகுறிகள்
Raja Balaji
11-03-2025, 23:35 IST
www.herzindagi.com
நாம் போதுமான அளவு இரும்புச்சத்து உட்கொள்ள தவறினால் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறையும்.
சராசரியாக மனிதனின் உடலில் 20-30 லட்சம் கோடி சிவப்பு அணுக்கள் இருக்கும்.
இந்த இரத்த சிவப்பு அணுக்கள் நுரையீரலில் இருந்து இரத்தத்தின் வழியாக ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு எடுத்து செல்லும்.
இரத்த சோகையின் அறிகுறிகள்
மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, தலைவலி, மஞ்சள் நிறத்திற்கு சருமம் மாறுவது, மயக்கம், சீரற்ற இதய துடிப்பு, அடிக்கடி பசியெடுப்பது இரத்த சோகையின் அறிகுறிகளாகும்.
ஊட்டச்சத்து குறைபாடு, மாதவிடாயின் போது அதீத இரத்த கசிவு காரணமாகவும் இரத்த சோகை ஏற்படலாம்.
இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் ஆயுட் காலம் 120 நாட்கள் ஆகும்.