மிளகாய் தூளில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா?


Sanmathi Arun
2023-03-17,19:18 IST
www.herzindagi.com

இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது

    சிவப்பு மிளகாயில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது, இது இரத்த நாளங்களை தளர்வாக வைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

    இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது.

தோல் மற்றும் முடியை மேம்படுத்துகிறது

    சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் E உள்ளதால் தோல் மற்றும் முடி இரண்டிற்கும் நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும்.

கண்களுக்கு நல்லது

    சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் A உள்ளது, இது கண்பார்வையை அதிகரிக்கவும் மாலை கண் பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    சிவப்பு மிளகாய் தூள் இரைப்பை சாறுகளின் சுரப்பை அதிகரித்து , செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிறு, செரிமானப் பாதை மற்றும் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கிறது.

சளியை போக்குகிறது

    சிவப்பு மிளகாய் தூளில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மூக்கிலிருந்து சளியை அகற்றி, நெரிசலில் நிவாரணம் அளிக்கிறது. சைனஸை எதிர்த்துப் போராடுவதற்கும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

    சிவப்பு மிளகாய் தூளில் இருக்கும் கேப்சைசின் எனும் பொருள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, அதாவது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது, குறிப்பாக தசைகள் மற்றும் மூட்டுகளில்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

    சிவப்பு மிளகாய்ப் பொடியில் உள்ள கேப்சைசின் எனும் கலவை, உடல் எடையை குறைக்க உதவுகிறது

முக்கிய குறிப்பு

    மிளகாய் தூளை அளவாக சேர்த்து கொள்வது மட்டுமே ஆரோக்கியமானது , அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல உடல் உபாதைகள் ஏற்படும்.

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.