H3N2 வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்
Sanmathi Arun
2023-03-17,16:31 IST
www.herzindagi.com
H3N2 வைரஸின் அறிகுறிகள்
தற்போது இந்தியாவில் பரவி வரும் H3N2 வைரஸின் அறிகுறிகளை பற்றி தெளிவாக விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா
மூக்கில் நீர் வடிதல்
முதல் அறிகுறியாக சிலருக்கு மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளி ஆரம்பிக்கிறது. பாராசிட்டாமல் எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் மாத்திரைகளை எடுத்த பின்பும், அறிகுறிகள் அதிகரிக்க தொடங்கினால் மருத்துவரை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்கிறார் நம் மருத்துவர் ஜெயஸ்ரீ
காய்ச்சல்
100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் கட்டாயம் அலட்சியம் செய்யாமல் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தலைவலி
சிலருக்கு மூக்கில் நீர் வடிதலுடன் சேர்த்து தலைவலியும், தலை பாரமும்,தொண்டை வலியும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
உடல் வலி மற்றும் நடுக்கம்
காய்ச்சலுடன் கடுமையான உடல் வலியும், நடுக்கமும் சிலருக்கு ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்பு சக்தியை பொருத்து அறிகுறிகள் வேறுபடும். எனவே நடுக்கம் மற்றும் அதிகப்படியான உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.
வறட்டு இருமல்
இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு வழக்கமாக இருக்கும் இருமலை விட அதிகப்படியான இருமல் 2 வாரங்களுக்கு நீட்டிக்கிறது.
முக்கிய குறிப்புகள்
- குழந்தைகளும் கர்ப்பிணிகளும் கவனமாக இருப்பது நல்லது. சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் மருத்தவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ.
சாப்பிட வேண்டிய உணவுகள்
உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள நிறைய தண்ணீர், மோர், சூப், ஜூஸ், இளநீர்,வெந்நீர் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.