இரண்டே நாட்களில் வாய் புண்களை சரி செய்ய உதவும் பாட்டி வைத்தியம்!


Shobana Vigneshwar
27-09-2023, 20:00 IST
www.herzindagi.com

வாய்ப்புண் குணமாக

    பாக்டீரியா மற்றும் புஞ்சை தொற்றுகளால் வாய் அல்லது நாக்கில் புண் ஏற்படலாம். வலி நிறைந்த இந்த புண்களை இரண்டு நாட்களில் நீக்க வேண்டுமா? இந்த பாட்டி வைத்தியத்தை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்…

Image Credit : freepik

தக்காளியை பயன்படுத்தலாம்

    தக்காளியில் உள்ள வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. வயிறு சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படும் வாய்ப்புண்களை போக்க தக்காளியை சாப்பிடலாம்.

Image Credit : freepik

டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம்

    டூத் பேஸ்டில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் புண்களை உண்டாக்கும் கிருமிகளை நீக்குகின்றன. வாய் புண்களில் இருந்து நிவாரணம் பெற புண் உள்ள இடங்களில் டூத் பேஸ்ட்டை தடவலாம்.

Image Credit : freepik

கிரீன் டீ குடிக்கலாம்

    கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தொற்று நோயை குறைப்பதுடன் அதன் பரவலையும் தடுக்கின்றன. இதனை தினமும் குடித்து வர வாய்ப்புண்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Image Credit : freepik

அதிமதுரத்தை பயன்படுத்தலாம்

    அதிமதுரத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்று நோய்களை எதிர்த்து போராடவும், வாய்ப்புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன. இதற்கு அதிமதுரத்தை இரவு முழுவதும் தண்ணீரல் ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி குடிக்கலாம்.

Image Credit : freepik

வாய் கொப்பளிக்கலாம்

    வாய்ப்புண்கள் ஏற்பட்டால், உணவு சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். இது வாயில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

Image Credit : freepik

தேன் சாப்பிடலாம்

    தேன் புண்களை ஆற்றவும் தொற்று பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. வாய் புண் ஏற்பட்டால் ஒரு டீஸ்பூன் தேனை பொறுமையாக நக்கி சாப்பிடவும். இவ்வாறு செய்வது வாய்ப்புண் மற்றும் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik