இலவங்கப்பட்டை தேன் தண்ணீர், தொப்பையை குறைக்க ஈஸியான வழி!


Shobana Vigneshwar
04-10-2023, 20:00 IST
www.herzindagi.com

தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும்

    உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க இலவங்கப்பட்டை மற்றும் தேன் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அற்புத பானத்தின் விரிவான செயல்முறையை இன்றைய பதிவில் காணலாம்.

Image Credit : freepik

ஸ்டெப் 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு பதிலாக ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Credit : freepik

ஸ்டெப் 2

    இதனை குறைந்த தீயில் வைத்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின்பு சூடு தணியும் வரை காத்திருக்கவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 3

    இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். நீங்கள் விரும்பினால் இதில் சிறிதளவு எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு சேர்ப்பது எடை இழப்புக்கு உதவும்.

Image Credit : freepik

குறிப்பு

    இந்த நீரை வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது குடிக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முன், இரவு தூங்க செல்வதற்கு முன் அல்லது நாள் முழுவதும் எப்போது பசி உணர்வு ஏற்பட்டாலும் இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik