காலை எழுந்தவுடன் நெஞ்செரிச்சலா? அதற்கான காரணம் மற்றும் தீர்வுகள்!


Alagar Raj AP
25-04-2024, 12:03 IST
www.herzindagi.com

இரவு உணவு

    இரவு அதிகம் காரமான உணவுகள், துரித உணவுகளை சாப்பிட உடனேயே தூங்குவது காலை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

டீ, காபி

    நாள் முழுவதும் டீ அல்லது காபியை அதிகமாக உட்கொள்வதும் காலை நெஞ்செரிச்சலுக்கு காரணமாக இருக்கிறது.

சாப்பிடாமல் இருப்பது

    உணவை தவிர்ப்பது, நீண்ட இடைவெளிக்கு சாப்பிடாமல் இருப்பது காலையில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

பால் குடிங்க

    இரவில் தூங்குவதற்கு முன், சர்க்கரை இல்லாமல் பால் குடிப்பது அசிடிட்டி பிரச்சனையை குணப்படுத்தி இரவு உணவின் செரிமானத்தை சீராக்கும்.

ஓமம் வாட்டர் குடிங்க

    ஓமம் வாட்டர் நெஞ்செரிச்சல் வாயுத்தொல்லை மற்றும் செரிமானம் போன்ற குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு சிறந்தது.

வாழைப்பழம் சாப்பிடுங்கள்

    இரவு தூங்குவதற்கு முன் வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதில் உள்ள உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து வயிற்று அமில உற்பத்தியை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

மருத்துவர் ஆலோசனை

    உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது அல்சர் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.