தினமும் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்


Sanmathi Arun
2023-01-24,18:18 IST
www.herzindagi.com

  எந்த பருவ காலமாக இருந்தாலும் 20 நிமிட சூரிய ஒளியில் தினமும் காலையில் நின்றால், நம் உடலுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

சிறந்த தூக்கத்திற்கு

  இரவில் சரியான தூக்கம் வராமல் தவிக்கிறீர்கள் என்றால், உங்கள் உடல் மீது தினமும் சூரிய ஒளி பட வேண்டும். இப்படி படுவதால் நமக்கு தூக்கத்தை தரக்கூடிய மெலடோனின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

எலும்புகள் வலுபெற

  வைட்டமின் D சக்தி நம் உடல் எலும்புகளுக்கு பலத்தை தரக்கூடியது. எனவே தினமும் 20 நிமிடங்கள் நாம் சூரிய ஒளியில் அமர்வதால், நம் உடல் எலும்புகள் அனைத்தும் மிகவும் பலம் பெறும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு

  சூரிய கதிர்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. எந்த காலமாக இருந்தாலும், காலை 8 மணிக்கு முன்பாக வரும் சூரிய கதிர்களில் நிற்பது நல்லது.

இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது

  இரத்த கொதிப்பு நோயாளிகள் தினமும் சூரிய ஒளியில் நிற்பதால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்

மனநிலை மாற்றத்தை சீராக்கும்

  தினமும் சூரிய ஒளியில் நிற்பதால் மன உளைச்சல் பிரிச்சனைகளை தவிர்க்கலாம். நம் மூளையில் செரோடோனின் எனப்படும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து மனதை குழப்பம் அடைய விடாமல் தெளிவாக வைக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கும்

  காலை சூரிய ஒளியானது நம் மூளையில் உள்ள தசைகளை தளர்வடைய செய்கிறது. தினமும் காலையில் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் மன அழுத்தத்தை குறைத்து மன அமைதி கிடைக்கிறது.

ஆரோக்கியமான கண்களுக்கு

  கண்களுக்கு வைட்டமின் D சத்து அவசியம் தேவை. இதற்கு தினமும் காலை 20 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படி உட்கார்ந்தோ அல்லது படுத்தோ இருக்க வேண்டும்.

படித்ததற்கு நன்றி

  இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.