காடை முட்டையில் இவ்வளவு நன்மைகளா!
Sanmathi Arun
2023-03-20,16:58 IST
www.herzindagi.com
இரத்த சோகையை குறைக்கிறது
காடை முட்டைகள் இரும்புசத்து நிறைந்தவை, எனவே வாரம் இரண்டு முறை காடை முட்டை எடுத்து கொள்வது இரும்பு சத்து குறைபாட்டை குறைக்கிறது.
சுவாசக் கோளாறுகளுக்கு உதவுகிறது
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க காடை முட்டைகளைப் பயன்படுத்துவது பண்டைய கால மருத்துவ முறைகளில் ஒன்று.
நீரிழிவு நோயை கட்டுபடுத்துகிறது
காடை முட்டையில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது . இதனால் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கண் பார்வையை மேம்படுத்துகிறது
காடை முட்டையில் வைட்டமின் A நிறைந்துள்ளது . வைட்டமின் A உங்கள் கண்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும் மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கும் .
புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
காடை முட்டைகளில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆன்டிகான்சர் ஏஜெண்டுகளும் உள்ளது.
சருமத்தை பாதுகாக்கிறது
காடை முட்டைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் மற்றும் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
முடியின் தரத்தை மேம்படுத்துகிறது
காடை முட்டையில் துத்தநாகம், இரும்பு, செலினியம், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் A, B, C மற்றும் E ஆகியவை உள்ளன, இவை ஆரோக்கியமான முடி வளர்சிக்கும், முடி உதிர்வை தடுக்கவும் உதவுகின்றன.
எலும்புகளை வலுபடுத்துகிறது
தொடர்ந்து காடை முட்டைகளை உட்கொள்வது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்