அடிக்குற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Alagar Raj AP
07-04-2025, 13:21 IST
www.herzindagi.com
ஐஸ்கிரீம் நன்மைகள்
கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஐஸ்கிரீம் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? ஐஸ்கிரீம் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அதை சாப்பிடுவதால் உடலுக்கு சில நன்மைகளும் கிடைக்கும்.
ஆற்றல் கிடைக்கும்
ஐஸ்கிரீமின் முக்கிய மூலப் பொருட்களான சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பாலில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.
மனநிலை மேம்படும்
ஆராய்ச்சியின் படி, ஐஸ்கிரீம் மனித மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை செயல்படுத்துகிறது. இது நாள் முழுவதும் நம்மை மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
எலும்புகளுக்கு வலுசேர்க்கும்
ஒரு தரமான ஐஸ்கிரீமில் 70 சதவீதம் பால் இருக்கும். கால்சியத்தின் நல்ல மூலமாக உள்ள பால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும்.
பசியை கட்டுப்படுத்தும்
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. னெனில் ஏனெனில் ஐஸ்கிரீமில் உள்ள கலோரிகளும் கொழுப்பும் அதிக நேரம் வயிறு நிரப்பிய உணர்வை தரும்.
உடல் எடை குறையும்
பெரும்பாலானவர்கள் ஐஸ்கிரீம் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் குளிர்ந்த உணவுகளை சாப்பிடும் போது உங்கள் உடல் அதிக கலோரிகளை இழக்கும். இருப்பினும் ஐஸ்கிரீம் அதிக கலோரிகள் உள்ள உணவு என்பதால் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.
செரிமான ஆரோக்கியம்
ஐஸ்கிரீம் புரோபயாடிக் உணவு என்பதால் இதில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருக்கும். அவை உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளித்து செரிமான பிரச்சனைகளை குறைக்கும்.
நீரேற்றம்
குளிர்ச்சியான தன்மை மற்றும் பாலில் தயாரிக்கப்படுவதால் ஐஸ்கிரீம் உடல் நீரேற்றத்திற்கு பங்களிக்கும். இருப்பினும் ஐஸ்கிரீமில் உள்ள சர்க்கரை நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் கோடையில் ஐஸ்கிரீமை அளவோடு சாப்பிட வேண்டும்.