பெண்களின் பல பிரச்சனைகளை தீர்த்து நன்மைகளை அள்ளி தரும் முருங்கை பூ


Sanmathi Arun
2023-01-26,09:36 IST
www.herzindagi.com

  முருங்கை மரத்தின் இலை, பூ, காய், பிசின், விதை, வேர் என அனைத்தும் எண்ணற்ற நன்மைகள் கொண்டுள்ளன. வெண்மை நிறம் கொண்ட சிறு முருங்கை பூ சாப்பிடுவதால் ஏற்படும் பெரிய நன்மைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு

  பெரும்பாலான பெண்கள்களுக்கு மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் கஷ்டபடுவார்கள். அவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

வெள்ளைபடுதல் பிரச்சனைக்கு

  உடலுக்கு தேவையற்ற சுரப்பி அதிகம் சுரப்பதாலும் உடல் சூட்டினாலும் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூவை தேநீராக்கி குடிக்க வேண்டும்.

கருவுறாமை பிரச்சனைக்கு

  பெண்களின் கருமுட்டை மற்றும் கருப்பை பிரச்சனைக்கும் ஆண்களின் அணுக்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். ஒரு மண்டலம் குடித்து வந்தால் கருத்தரிக்க உதவும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

  அதிக படியாக கணினியில் வேலை பார்ப்பது ,மொபைல் அதிகம் பயன்படுத்துவது, வேலை பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் பலவீனமடைந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். அவர்கள் முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை பருக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு

  சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட முருங்கை பூ கஷாயம் பெரிதும் உதவும்.

நீரிழிவு நோயாளிக்கு

  நீரிழிவு நோயாளிகள் முருங்கை பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும், நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும்.

பித்தம் குறைய

  பித்தம் அதிகரிப்பதால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினசரி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

கண்களைப் பாதுகாக்கும்

  கண் பிரச்சனை குறிப்பாக கண் வறண்டு போவது , பார்வை மங்கலாகத் தெரிவது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

படித்ததற்கு நன்றி

  இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.