தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Raja Balaji
29-03-2025, 18:33 IST
www.herzindagi.com
உப்பு கலந்த தண்ணீர் நன்மைகள்
வியர்வை காரணமாக நம் உடல் இழக்கும் எலக்ட்ரோலைட்களை திரும்ப பெறுவதற்கு ஒரு சிட்டிகை உப்பு கலந்த தண்ணீர் உதவும்.
உப்பில் உள்ள சோடியம் உடலில் நீரேற்றத்தை உறுதி செய்யும். வெயில் காலத்திலும், உடற்பயிற்சியின் போதும் உடலில் நீரிழப்பை தடுக்க உப்பு கலந்த தண்ணீர் குடியுங்கள்.
பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது தசை பிடிப்பு ஏற்பட்டால் உப்பு கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது.
செரிமானத்திற்கும் உப்பு கலந்த தண்ணீர் உதவும். வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.
இவையெல்லாம் சாதகம் என்றாலும் தேவையான அளவைவிட சோடியம் எடுத்துக் கொண்டால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சிறுநீரக பிரச்னை இருந்தால் உப்பு கலந்த தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.