பேரீச்சம் பழம் கலந்த பால் இவ்வளவு நல்லதா


sreeja kumar
2023-01-25,10:52 IST
www.herzindagi.com

பேரீச்சம் பழம் கலந்த பால்

  இரும்புச்சத்துக்கான முக்கிய ஆதாரமாக பால் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளது. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது இரும்புச்சத்து குறைபாடு நீங்குகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்தம் உறைதலை தடுக்கவும் பாலில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடலாம்.

செரிமானத்தை தூண்டுகிறது

  பேரீச்சம்பழம் நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாகும். இது செரிமானத்திற்கு நல்லது. அதே போல் பாலில் இருக்கும் லாக்டேஸ் நொதி குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை எளிதாக்குகிறது.

தூக்கமின்மை

  இரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் பாலில் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடிக்கலாம். இதனால் முழுமையான தூக்கம் கிடைக்கும். அதே போல் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

தாய்மார்களுக்கு நல்லது

  பாலூட்டும் தாய்மார்கள் பாலில் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். தாய்மார்கள் சோர்வடையாமல் வலுவாகவும் தெம்பாகவும் இருப்பார்கள்.

எலும்புகளுக்கு நல்லது

  பாலில் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரிக்கும். இது எலும்புகளை வலுப்படுத்த மிகவும் உதவும். நரம்பு தளர்ச்சி, முதுகு வலி இருப்பவர்களும் இதை குடிக்கலாம்.

சருமத்திற்கு நல்லது

  இதில் இருக்கும் வைட்டமின் C சருமம் மற்றும் முகத்திற்கு பொலிவை தருகிறது. மேலும், முகப்பருவைக் குறைக்கவும் தடுக்கவும் பேரீச்சம் பழம் கலந்த பால் உதவுகிறது. சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றத்தை குறைக்கவும் இந்த பாலை தினமும் பருகலாம்.

ஞாபக சக்திக்கு நல்லது

  ஞாபக திறன் மேம்படவும், படிப்பில் கவனம் செலுத்தவும் மாணவர்கள் இரவில் பாலில் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடிக்கலாம். இதனால் காலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.