நன்மைகளை அள்ளி தரும் கற்றாழை ஜூஸ்


sreeja kumar
2023-01-27,14:55 IST
www.herzindagi.com

கற்றாழை ஜூஸ்

    எளிமையாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய கற்றாழை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டையும் தரக்கூடிய கற்றாழை ஜூஸின் பலன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மலச்சிக்கலுக்கு தீர்வு

    மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலை நேரத்தில் குடிக்கலாம். கற்றாழையில் இருக்கும் ஆந்த்ராகுவினோன் என்ற சேர்மம் மலச்சிக்கலை சரிசெய்கிறது. மருத்துவரின் அறிவுரைப்படி இதை எடுத்து கொள்வது நல்லது.

வயிற்றுப் புண்களைத் தடுக்கும்

    அதிகப்படியான கார உணவு அல்லது பிற காரணங்களால் வயிற்றில் புண்கள் உண்டாகிறது. இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வயிறை குளிர்ச்சியாக வைத்து கொள்ள கற்றாழை ஜூஸை குடிக்கலாம். கற்றாழை சாறு வயிற்றில் புண்கள் ஏற்படுவதைக் குறைக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

    கற்றாழையில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் உள்ளது. காலை நேரத்தில் கற்றாழை ஜூஸை எடுத்து கொண்டால் செரிமானம் மேம்படும். மேலும், இதில் இருக்கும் வைட்டமின் C ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    கற்றாழையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்பு உள்ளது. வெறும் வயிற்றில் காலை நேரத்தில் கற்றாழை ஜூஸ் குடிப்பது நல்ல பலனை தரும். இருப்பினும் நீரழிவு நோயாளிகள் மருத்துவரின் அறிவுரைப்படி தகுந்த அளவுடன் கற்றாழை ஜூஸை எடுத்து கொள்வது நல்லது.

சருமத்திற்கு நல்லது

    முக அழகு மற்றும் சரும பொலிவுக்கு பெண்கள் கற்றாழை ஜூஸை எடுத்து கொள்ளலாம். இதில் உள்ள நீர்ச்சத்து முகத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது.

நீர்ச்சத்து நிறைந்தது

    கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெற கற்றாழை ஜூஸை தாரளமாக உட்கொள்ளலாம். இது உடலுக்கு ஏற்ற சிறந்த பானமாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதுகாக்கும். வைட்டமின் Cயின் சிறந்த மூலமாகவும் கற்றாழை ஜூஸ் உள்ளது.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.