அத்தி பால் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?


Shobana Vigneshwar
2023-01-24,17:31 IST
www.herzindagi.com

அத்தி பால்

  பால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உடம்பின் வெப்பநிலையைப் பராமரிக்கவும் அத்திப்பால் குடிக்கலாம்.இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

  அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், செரிமான மண்டலம் சீராக இருக்கும்.இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, செரிமான செயல்முறையைச் சீராக வைத்திருக்கிற உதவுகிறது.

சருமத்திற்கு நல்லது

  அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து குடிப்பதால், சரும பிரச்சனைகள் குணமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.

உடல் ஆற்றலை அதிகரிக்கிறது

  அத்திப்பழத்தில் சல்ஃபர், குளோரின் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் செயல்பட, அத்திப்பால் குடிக்கலாம்.

ஆரோக்கியமான இதயம்

  இதயம் ஆரோக்கியமாக இருக்க தினமும் அத்தி பால் குடியுங்கள்.இதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்.

மலச்சிக்கலை போக்கும்

  இரவில் அத்திப்பால் குடிப்பது, பைல்ஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை மென்மையாக்குகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

  அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து குடிப்பதால், இரத்த அழுத்தப் பிரச்சனையும் குணமாகும்.அத்திப்பழத்தில் உள்ள, ஃபிளாவொனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தப் பிரச்சனையைக் குறைக்கிறது.

அத்தி பால் குடிக்கவும்

  இப்பதிவில் பகிரப்பட்டுள்ள அத்திப்பாலின் நன்மைகளை நீங்களும் பெற விரும்பினால், தினமும் அத்திப்பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.