அரசமர இலை நீரின் அசரவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!


Shobana Vigneshwar
21-09-2023, 06:00 IST
www.herzindagi.com

அரசமர இலை நீர்

    அரசமரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அரசமர இலையைத் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து குடித்து வந்தால் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்…

Image Credit : freepik

அரசமர இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

    அரசமர இலையில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், தாமிரம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனுடன் ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு போன்ற பல அற்புத பண்புகளும் காணப்படுகின்றன.

Image Credit : freepik

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

    அரசமர இலை நீர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள சர்க்கரை நோய் எதிர்ப்புப் பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.

Image Credit : freepik

செரிமானத்திற்கு நல்லது

    செரிமான மணடலத்தை வலுப்படுத்தவும், வயிறு சார்ந்த பிரச்சனைகளை தடுக்கவும் அரசமர இலை நீர் உதவும். இதை தொடர்ந்து குடித்து வர வாயு, உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Image Credit : freepik

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்

    உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அரசமர இலை நீரை குடிக்கலாம். இது உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

Image Credit : freepik

நச்சுக்களை நீக்க உதவும்

    அரசமர நீர் குடிப்பது உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இது இரத்தத்தை சுத்தீகரிப்பதன் மூலம் உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik