விடுமுறையில் ட்ரை பண்ண இளநீர் பொங்கல் ரெசிபி


Alagar Raj AP
12-01-2025, 08:03 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    3/2 கப் பச்சரிசி, 2 கப் இளநீர், 1 கப் வெல்லம், 1/2 கப் தேங்காய் துருவல், 1/4 கப் பாசிப்பருப்பு, 1 கப் தேங்காய் பால், 1/4 கப் நெய், 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள், முந்திரி, உலர் திராட்சை தேவையான அளவு

ஸ்டெப் 1

    முதலில் வெல்லத்தை பொடித்து அரை கப் தண்ணீரில் பாகு காய்ச்சி தனியாக எடுத்து வைக்கவும்.

ஸ்டெப் 2

    பாசிப்பருப்பை கடாயில் குறைந்த தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.

ஸ்டெப் 3

    அடுத்ததாக குக்கரில் பச்சரிசி, வறுத்த பாசிப்பருப்பு மற்றும் இளநீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வேக வைத்து ஐந்து அல்லது ஆறு விசில்விட்டு இறக்குங்கள்.

ஸ்டெப் 4

    குக்கரில் பிரஷர் குறைந்ததும் திறந்து அரிசி கலவை நன்றாக கிளறிவிட்டு வெல்லப்பாகு மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கிண்டி அடுப்பை அணைக்கவும்.

ஸ்டெப் 5

    இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொங்கலில் சேர்த்து கிளறவும்.

இளநீர் பொங்கல்

    அவ்வளவுதான் இந்த விடுமுறைக்கு குடும்பத்துடன் ருசிக்க சுவையான இளநீர் பொங்கல் ரெடி.