மதிய வெஞ்சனத்திற்கு மாதுளை பொரியல் செய்யலாம் வாங்க!


Alagar Raj AP
01-09-2024, 10:00 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    1 கப் மாதுளை விதைகள், 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1/2 கப் துருவிய தேங்காய், 1 பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் கடுகு, 1 பச்சை மிளகாய், எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு

ஸ்டெப் 1

    முதலில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் தனித்தனியாக வைக்கவும்.

ஸ்டெப் 2

    அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

ஸ்டெப் 3

    அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஸ்டெப் 4

    வதக்கி இறக்கியதும் மாதுளை விதைகளை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.

ஸ்டெப் 5

    இறுதியாக துருவிய தேங்காயை மாதுளை விதைகளுடன் சேர்த்து கிண்டுங்கள்.

    அவ்வளவுதான் மதிய வெஞ்சனத்திற்கு சுவையான ஆரோக்கியமான மாதுளை பொரியல் தயார்.