விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சாப்பிட்ட உணவுகள்
Raja Balaji
20-03-2025, 08:36 IST
www.herzindagi.com
விண்வெளி நிலையத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மட்டுமே வழங்கப்படும். காலை உணவாக சுனிதாவும், புட்ச் வில்மோரும் பவுடர் பால், தானிய வகைகள், சூரை மீன் உட்கொண்டு இருக்கின்றனர்.
நாசாவின் மருத்துக் குழு சுனிதா, வில்மோர் உட்கொள்ளும் உணவுகளின் கலோரிகளை கவனித்து வந்தது.
முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் ப்ரெஷ் ஆன பழங்கள், காய்கறிகள் விண்வெளி நிலையத்தில் கிடைத்துள்ளன. அதன் பிறகு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமே.
இறைச்சி, முட்டை போன்ற அனைத்தும் பூமியிலேயே சமைக்கப்பட்டவை. விண்வெளி மையத்தில் அவற்றை சூடுபடுத்தி சாப்பிட்டால் போதுமானது.
சூப் வகைகளை தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அருந்தலாம். விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்களின் சிறுநீரும், வியர்வையும் குடிநீராக சுத்திகரிப்பு செய்யப்படுமாம்.
ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் போது தசை இழப்பு, உடலில் திரவ நிலை, சிறுநீரகம் மற்றும் கண் பார்வையில் பிரச்னை ஏற்படலாம்.