இந்த கிறிஸ்துமஸ்க்கு கேரளா ஸ்பெஷல் திருச்சூர் ஸ்டைல் சிக்கன் கறி ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க


S MuthuKrishnan
23-12-2024, 11:06 IST
www.herzindagi.com

சிக்கன்

    சிக்கனை நடுத்தர துண்டுகளாக வெட்டி நன்கு கழுவிக் கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு, மிளகு தூள் சேர்த்து மேரினேட் செய்து வைத்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கி கொள்ளவும்.

    இப்போது அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பழுப்பு நிறமாக மாற வேண்டும்.

    இப்போது அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பின்னர் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்,

    தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கிக் கொள்ளவும் பிறகு அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கருப்பு மிளகு தூள், மல்லி தூள், கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றி கிளறவும்.

    இப்போது முதலில் மேரினேட் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

    சிக்கன் 70 % வெந்தவுடன் அதனுடன் தேங்காயை அரைத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டாம் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுப்பை சிறிதாக வைத்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும். இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைக்கவும்.

    இப்போது சிக்கன் கறி கிரேவி போன்ற பதத்திற்கு வந்தவுடன் எடுத்து வைத்துள்ள தேங்காய் முதல் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்து கேரளா ஸ்பெஷல் திருச்சூர் ஸ்டைல் சிக்கன் கறி கிரேவி பதத்திற்கு வந்தவுடன் அதன் மீது சிறிது கருவேப்பிலை சேர்த்து மேலே சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

    இப்போது கேரளா ஸ்பெஷல் திருச்சூர் ஸ்டைல் சிக்கன் கறி கிரேவி தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு

    அடுப்பை அணைத்த பின் தனியாக தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயத்தை தாளித்து இதில் சேர்த்தால் சுவை மேலும் கூடும்.