தினமும் புஷ்அப்கள் செய்வதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?


Jansi Malashree V
28-12-2024, 16:21 IST
www.herzindagi.com

    உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உடற்பயிற்சிகள் செய்வது இன்றியமையாத ஒன்று. அதிலும் எவ்வித உபகரணமும் இல்லாமல் செய்யக்கூடிய புஷ்அப்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

தசை ஆரோக்கியம்

    புஷ்அப்கள் செய்யும் போது மார்பு, தோள்கள் போன்ற அனைத்தும் வேலை செய்யும் போது தசை ஆரோக்கியம் சீராக இருக்கும்..

இதய ஆரோக்கியம்:

    உடலின் ஒட்டு மொத்த தசைகளும் ஒரே நேரத்தில் செயல்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய ஆக்ஸிஜன் சீராக செல்கிறது.

சீரான மன அழுத்தம்: 

    புஷ்அப்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது மன அழுத்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. 

மூட்டு வலிக்குத் தீர்வு: 

    தோல்கள் மற்றும் மணிக்கட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது.